உணவகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியர் மீது வாளால் தாக்குதல்-சிசிடிவி காட்சிகள்

0 2761

மதுரையில் உணவகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியர், வாளால் தாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

முனிச்சாலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த 4 பேர், அங்கேயே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட உணவக ஊழியர் முனீஸ்வரன், மது அருந்தக் கூடாது என அவர்களிடம் கூறியதை அடுத்து, இருதரப்பிடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து, குடிபோதையில் இருந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முனீஸ்வரனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments