தண்டவாளத்தில் வேனை நிறுத்திச் சென்ற மர்ம நபர்... வேன் மீது மோதியதில் தடம்புரண்ட ரயில்

0 1257

ஆஸ்திரேலியாவில் நடு தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது  ரயில் மோதியதில் அந்த ரயில் தடம் புரண்டது.

4 பெட்டிகளுடன் சென்ற ரயில், சிட்னியில் கிழக்கே உள்ள வொலங்காங்கில் விபத்துக்குள்ளானதில் ரயில் ஓட்டுனர் இன்ஜின் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டார். ரயில் ஓட்டுனர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தின் நடுவே வேனை நிறுத்துவிட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments