ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பதவியேற்றுக் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருதரப்பினராக மோதல்

0 1746

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருதரப்பாக மோதிக் கொண்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பதவியேற்பு விழா முடிந்த பின் உறுப்பினர்கள் புறப்பட்ட போது, ஒருத்தரப்பினர் வலுக்கட்டாயமாக ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கையை பிடித்து இழுத்து தங்களுடைய வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது  இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்வில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சர்ச்சையால் இருத்தரப்பாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments