அப்பாவி மக்கள் 11 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

0 1804

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர்.

காஷ்மீரில் அப்பாவி மக்கள் 11 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதன் பின்னணியில் தீவிரவாதிகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அது குறித்த விசாரணை தீவிரவாத தடுப்பு வழக்குகளை கவனிக்கும் என்ஐஏ இடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் திடீர் சோதனைகளை என்ஐஏ நடத்தி உள்ளது. இதனிடையே, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள வயல்வெளிகளில் இருந்து பாகிஸ்தான் தயாரிப்பான 22 கைத்துப்பாக்கிகளை எல்லை பாதுகாப்புப் படை கைப்பற்றி உள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் ஆயுதப் புழக்கம் இருப்பதாக பஞ்சாப் போலீஸ் அளித்த உளவுத்தகவல்களின் அடிப்படையில் சர்வதேச எல்லையில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் உள்ள கெம்கரன் என்ற இடத்தில் இந்த கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

100 ரவுண்டுகள் சுடக்கூடிய குண்டுகள், 44 தோட்டா மேகசின்கள் மற்றும் ஒரு பாக்கெட் ஓபியம் போதை மருந்து ஆகியனவும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக  எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments