தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1528

தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் 68 சதவிகிதம் பேர் பேர் முதல் தவணையும், 25 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறினார். வரும் சனிக்கிழமை நடைபெறும் ஆறாவது மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக கிண்டி மடுவின்கரையில் மாநகராட்சி கட்டியுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து அங்கிருந்த உடற்பயிற்சி சாதனங்களில் சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments