உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரில் புதிய சர்வதேச விமான நிலையம்... திறந்து வைத்தார் பிரதமர் மோடி

0 2678

புத்த கலாச்சார நகரங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரில் புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர்,பல ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைவேறி உள்ளதாக கூறினார். புத்த மதம் தொடர்பான சுற்றுலா வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் உதவியாக இருக்கும் எனவும் மோடி கூறினார். சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டதன் அடையாளமாக இலங்கையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் மகன் தலைமையில் 100 க்கும் அதிகமானோர் வந்த ஏர்லங்கா விமானம் குஷிநகரில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த துறவிகள், இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்தனர். உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினரின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான குஷிநகர், கவுதம புத்தர் தமது இறப்புக்குப் பின்னர் மகாபரிநிர்வாணத்தை அடைந்த அவரது இறுதி தலமாக போற்றப்படுகிறது. அங்குள்ள விமான நிலையத்தை 260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments