அருணாசலப் பிரதேச எல்லையில் படையினரைக் குவித்துள்ளது சீனா... எல்லையில் ராணுவத்தின் வலிமையை இந்தியாவும் அதிகரித்து வருகிறது - மனோஜ் பாண்டே

0 1649

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளையும் படையினருக்கான குடியிருப்புகளையும் சீனா கட்டி வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

சிக்கிம், பூடான், திபெத் எல்லைகள் ஒன்றுகூடும் டோக்லாம் என்னுமிடத்தில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியை 2017ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

அதிலிருந்தே சிக்கிம், அருணாசலப் பிரதேசத்தை ஒட்டி ஆயிரத்து 346 கிலோமீட்டர் எல்லை நெடுகிலும் சீன ராணுவம் படையினரைக் குவித்து வருகிறது.

சீனாவின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் எல்லையில் ராணுவத்தின் வலிமையை இந்தியாவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு டோக்லாமில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளைச் சீனா நிறுவி வருவதுடன், நிலையாகப் படையினரைக் குடியமர்த்தும் வகையில் குடியிருப்புகளையும் கட்டி வருவதாக, இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments