ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது ஏன்? பிரதமர் மோடி விளக்கம்

0 2330

இந்தியாவின் விமானப் போக்குவரத்தை தொழில்முறை திறனுடன் நடத்தவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான பயணத்தை வழங்கவும், ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துக்கு இந்த முடிவு புதிய ஊக்கத்தை அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான புதிய விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் உள்ளிட்டவற்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மோடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments