எச்டிஎப்சி வங்கி கணக்கில் மோசடியாகப் பணம் எடுக்க முயற்சி, வங்கி ஊழியர் உட்பட 12 பேர் கைது

0 1897

வெளிநாடுவாழ் இந்தியரின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாகப் பணம் எடுக்க முயன்ற எச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் மூவர் உட்படப் பன்னிரண்டு பேரை டெல்லிக் காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவு கைது செய்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பெருந்தொகை இருந்த நிலையில், அவரது கடனுக்காக அது முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த மோசடியாளர்கள் எச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியுடன் அந்தக் கடன் முடக்கத்தை நீக்கியதுடன், அதன் உரிமையாளர் பெயரில் காசோலைப் புத்தகத்தையும், செல்பேசி சிம்மையும் பெற்றுள்ளனர்.

அந்தக் கணக்கில் இருந்து மோசடியாகப் பணம் எடுக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டதால் டெல்லி சைபர் கிரைம் பிரிவுக்கு வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்துக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, எச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் மூவர் உட்பட 12 பேரைக் கைது செய்தனர்.

விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை ஊழியர்கள் மூவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளதாக எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments