அர்ச்சகர்களை நியமிக்கத் தடையில்லை - உயர்நீதிமன்றம்

0 1613

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய விதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்றும் அரசே அர்ச்சகர்களை நியமிக்க முடியாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை அடுத்து, அர்ச்சகர் பணி நியமனங்கள், இவ்வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என நீதிபதி தெரிவித்தார். மேலும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments