ஊழல் ஒழிப்பு - பிரதமர் மோடி நம்பிக்கை!

0 1828

கடந்த ஆறேழு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் காரணமாக, ஊழலை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

குஜராத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சிபிஐ அதிகாரிகளின் கூட்டு மாநாட்டை காணொலியில்  பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆறேழு ஆண்டுகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகளால், நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் ஊழல் செய்தால், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது என்பதுடன், ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றார் அவர். முந்தைய பாஜக அல்லாத ஆட்சிகளில் ஆட்சியாளர்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாகத் திறன் இருந்ததில்லை என்ற அவர், தற்போது ஊழலுக்கு எதிராக தைரியமாக நடவடிக்கை எடுக்க கூடிய திறன் அரசுக்கு உள்ளது என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் ஊழலுக்கு பங்கில்லை எனவும் அது வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் எனவும் மோடி திட்டவட்டமாக கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த பல அரசுகளில் எல்லா விவகாரங்களையும் அரசே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்மறையான சிந்தனை இருந்ததாக  குறிப்பிட்ட மோடி, நாட்டில் பல தவறான காரியங்கள் நடக்க அது காரணமாக இருந்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments