ஷாரூக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?

0 1405

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், போதைப் பொருள் குறித்து பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேசியதற்கான சாட் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் கடந்த 2-ந் தேதி சொகுசுக் கப்பலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், போதைப் பொருள் குறித்து பல்வேறு நபர்களிடம் ஆர்யன்கான் பேசியிருப்பதாக ஏற்கனவே என்.சி.பி. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இதில் பாலிவுட் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே, ஆர்யன்கான் 2ஆவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments