நகைக்கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை !

0 1846

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பாவா மார்க்கெட்டில் சத்குரு ஜூவல்லர்ஸ் கடைக்குள் புகுந்த 3 பேர் துப்பாக்கி முனையில் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

ஒரே பைக்கில் வந்த அந்த 3 பேரில் இரண்டு பேர் நகை வாங்குவது போல கடைக்குள் புகுந்து துப்பாக்கியை எடுத்து மிரட்டினர். கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டிய அவர்கள் கடையில் இருந்த மொத்த நகைகளையும் சுருட்டிக் கொண்டு தயாராக நின்றிருந்த மூன்றாவது நபரின் பைக்கில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments