கனடாவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து தலைப்பாகையால் உயிர் பிழைத்த இளைஞர்!

0 6449

கனடாவில் பாறைகள் நிறைந்த நீர் வீழ்ச்சி ஒன்றில் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் சீக்கியர்கள் அணியும்  தலைப்பாகையினால் உயிர் பிழைத்தார்.

கனடாவில் உள்ள Golden Ears அருவிப் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்ததால் காப்பாற்றும்படி கூக்குரலிட்டார். அப்போது அந்த பக்கம் சென்ற 5 சீக்கியர்கள் உடனடியாக தங்கள் தலைப்பாகையினை அவிழ்த்து கயிறு போல் கட்டி அதன் ஒருமுனையை இளைஞரை நோக்கி வீசியுள்ளனர்.

அந்த இளைஞனும் ஒரு முனையை பிடித்தபடி மெதுவாக பாறையின் மீது ஏறி பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தார். தலைப்பாகையின் உதவியால் இளைஞர் காப்பாற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments