காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து வேட்டையாடி வரும் ராணுவத்தினர்... மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

0 2209

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து வேட்டையாடி வரும் ராணுவத்தினர் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நார் காஸ் வனப்பகுதியில் ஆறேழு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.தீவிரவாதிகள் தப்பி விடாதபடி சூழ்ந்துள்ள வீரர்கள் இறுதித் தாக்குதல் தொடுக்க வியூகம் அமைத்துள்ளனர்.

ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழக்கவும் 11 அப்பாவி மக்கள் கொல்லப்படவும் காரணமாக விளங்கும் தீவிரவாதிகளைக் கூண்டோடு ஒழிக்க கடந்த பத்து நாட்களாக இப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments