விவசாய தோட்டத்தில் இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் புதைத்த கணவன்... கொலையா? இயற்கை மரணமா? தீவிர விசாரணை

0 3346

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் கணவனே மண்ணை போட்டு புதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓலக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி துளசிமணி அவ்வப்போது விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் இரவில் தங்கி கொள்வது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக துளசிமணியை காணாததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள்  விவசாய தோட்டத்திற்கு சென்ற போது துர்நாற்றம் வீசுவதை கண்டு வருவாய்துறை மற்றும்  போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது  துளசிமணி வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் அன்று  விஜயதசமி என்பதால் யாரும் வர மாட்டார்கள் என நினைத்து உடல் மீது  மண் போட்டு மூடியதாகவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து துளசிமணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் முடிவுகள் வந்த பின்னர் தான் இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments