அமெரிக்காவில் சிறிய விமானம் நொறுங்கி விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 24 பேர்!

0 1512

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 21 பயணிகளுடன் புறப்பட்ட சிறிய விமானம் புல்தரையில் விழுந்த விபத்தில், அதில் பயணித்த 3 ஊழியர்கள் மற்றும் 21 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஹுஸ்டன்  விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட MD-87 இரட்டை என்ஜின் சிறிய விமானம், கிளம்பிய சிறிது நேரத்தில் நிலையத்தின் வேலியை உடைத்து அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 21 பயணிகள், 3 விமான ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments