சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 1677

சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடுகிறார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நூறு ரூபாயைத் தாண்டியது. இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் வெளிநாட்டு இறக்குமதியையே 85 சதவீதம் நம்ப வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி ஆறாவது முறையாக பிரதமர் மோடி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுடன் காணொலி வாயிலாக முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் இதில் பங்கேற்கிறார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உள்ளிட்ட இத்துறையில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்தும் இந்தியாவில் முதலீட்டிற்கு சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் பொதுத்துறை நிறுவனத்திலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments