ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு - நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்!

0 2843

ரஷ்யாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த புதின் அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதியானதுடன், ஆயிரத்து 15 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கினாலும், தடுப்பூசி செலுத்துவதில் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே பரிசுகள் வழங்கி தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments