சென்னையில் கார் மோதி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி!

0 3070

சென்னையில், கார் மோதி இறந்த காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் உடலுக்கு  டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் தொழில் நுட்பப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பிரசன்னா, அலுவலம் எதிரே உள்ள மெரினா காமராஜர் சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி உயிரிழந்தார்.

இந்நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசன்னாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டிஜிபி சைலேந்திரபாபு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments