அறைக்குள் உள்புறமாக தாழிட்டுக் கொண்டு கதறிய 2 வயது குழந்தையை, பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

0 2946

திண்டுக்கலில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, உட்புறமாக தாழிட்டுக் கொண்டு அறைக்குள் சிக்கிய நிலையில், தீயணைப்புத் துறையினர் கதவை திறந்து குழந்தையை மீட்டனர்.

விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அசாரூதின் என்பவரின் 2 வயது குழந்தை ஆசாத், வீட்டின் அறைக்குள் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டது. பெற்றோர் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த வேளையில், தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட குழந்தை, மீண்டும் அதனை திறக்கத் தெரியாமல் உள்ளே சிக்கிக் கொண்டு தவித்தது.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ஹைட்ராலிக் ஓப்பனர் கருவியின் உதவியுடன் கதவு திறக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments