ஆந்திராவில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்... தரதரவென இழுத்து வந்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்

0 2866

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

பிடுகுரல்லா என்ற பகுதியில் இயங்கி வரும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் சிவாரெட்டி. அப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், திடீரென பள்ளிக்குச் செல்லமாட்டேன் எனக் கூறி, பெற்றோரிடம் அழுதுள்ளார்.

தலைமை ஆசிரியர் சிவாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் கூறவே, ஆவேசமடைந்த பெற்றோர், சக மாணவர்களின் பெற்றோருடன் பள்ளியிலுள்ள தலைமை ஆசிரியரின் அறைக்கே சென்று சிவாரெட்டியை தரதரவென வெளியே இழுத்து வந்து போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments