ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை செய்த நபர்... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை..!

0 3101

அரியலூர் அருகே பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடுகூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவன், சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்தான் என்று கூறப்படுகிறது.

அதுகுறித்து சிறுமி தரப்பில் போலீசில் புகாரளித்தும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், வேல்முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமி, பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஆத்திரமடைந்த உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, புகாருக்குள்ளான 10 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments