காசாவில் பழைய பேப்பரில் இருந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் "கேன்வாஸ்" தயாரிக்கும் பெண்கள்!

0 2077

காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனத் தம்பதி, பழைய பேப்பரில் இருந்து ஓவியம் வரையப் பயன்படுத்தப்படும் கேன்வாஸ்களை தயாரித்து வருகின்றனர்.

காசாவில் பேப்பர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், வீட்டில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட பேப்பரை என்ன செய்வது என யோசித்து வந்த திருமதி ஹுடா தபித் அவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தி கேன்வாஸ்களாக மாற்ற முடிவெடுத்தார்.

இதையடுத்து பழைய பேப்பரை சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை தண்ணீரில் ஊற வைத்து கலவையாக்கி, பின்னர் காயவைத்து கான்வாஸ்களை தயாரிக்கத் தொடங்கினார். அதில் ஓவியம் தீட்டுவது சுலபமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments