வேளச்சேரியில் செல்போனை பறித்து தப்பிச் செல்லும் போது சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த கொள்ளையர்கள்!

0 2267

சென்னை வேளச்சேரியில் செல்போன் பறித்து விட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த நிலையில், அவர்களை விரட்டிச் சென்ற உரிமையாளரின் பைக் மோதி சாலையை கடக்க முயன்ற பெண் காயமடைந்தார்.

கைவேலி மேம்பாலத்தின் மீது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த மோகன் என்பவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரிடம் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

அவர்களை, மோகன் துரத்தி சென்ற போது, வேளச்சேரி 100 அடி சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோகனின் பைக் மோதியது. அதில், அப்பெண் லேசாக காயமடைந்த நிலையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரும் சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments