கழிவுநீர் குழாய் அடைத்ததில் உறவினருடன் ஏற்பட்ட தகராறு, கடிதம் எழுதிவைத்து வயதான தம்பதி தீக்குளித்துத் தற்கொலை

0 1654

அம்பத்தூரில் கழிவுநீர் குழாய் இணைப்பு அடைத்ததில் ஏற்பட்ட தகராறில், வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் - மாரியம்மாள் தம்பதி. இவர்களது வீடு இருக்கும் அதே காம்பவுண்டின் முன் பகுதியில் ஜானகிராமனின் தம்பி மனைவி சசிகலா என்பவர் கணவரை இழந்து வளர்ப்பு மகனுடன் வசித்து வருகிறார்.

கழிவு நீர் வெளியேறுவதற்காக இருவரது வீடுகளுக்கும் பொதுவாக ஒரு கழிவுநீர் குழாய் உள்ளது. சசிகலாவுக்கும் ஜானகிராமன் தரப்புக்கும் நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், இந்த கழிவு நீர் குழாயின் ஒரு பகுதியை சசிகலா அடைத்துவிட்டார் என்றும் அதனால் ஜானகிராமன் வீட்டின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சசிகலா தகாத சொற்களால் திட்டியதாகக் கூறப்படும் நிலையில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, தம்பதி இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments