இந்துக்களை தாக்கியதாக வங்கதேசத்தில் 450 பேர் கைது..!

0 2223

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 450 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்துக்கள் குரான் உள்ளிட்ட இஸ்லாமிய மத நம்பிக்கைகளை அவமதித்து விட்டதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அன்று நவகாளி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்துக் கோவில்கள் மற்றும் அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. துர்கா பூஜை அன்று நடந்த வன்முறை தொடர்பாகவும் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments