உ.பி. தேர்தலில் காங். சார்பில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கீடு - காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி!

0 1743

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 40 சதவிகித இடங்களில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தேர்தல் திட்டங்களை வகுத்துள்ளது. அதற்காக பிரியங்கா காந்தி தலைமையில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரியங்கா காந்தி பெண்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதால் அவர்களுக்கு 40 சதவிகித வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments