துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.67 கிலோ தங்கம், இரண்டு பேர் கைது

0 1553

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ 67 கிராம் எடையுள்ள தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த 6 ஆண் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு பயணிகள் 10 தங்க கட்டிகளை தங்களது குடல் பகுதியிலும், செயின்களாகவும் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் எடை 2 புள்ளி 67 கிலோ என்றும் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடியே 40 லட்சம் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments