தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

0 2178

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 20,21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 20, 21 ஆகிய தேதிகளுக்கு மீனவர்கள் அங்கு செலல் வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments