கடையின் பூட்டை உடைத்து உள்ளே நோட்டமிட்ட திருடனை வீட்டில் இருந்தே கையும் களவுமாக பிடித்த சம்பவம்..

0 2432
கோவையில் கம்பியூட்டர் சர்வீஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நோட்டமிட்ட திருடனை கடை உரிமையாளர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் கம்பியூட்டர் சர்வீஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நோட்டமிட்ட திருடனை கடை உரிமையாளர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

சித்ரா பகுதியில் அதிகாலை 4 மணியளவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே பணம் உள்ளதா என திருடன் நோட்டமிட்டான். இந்த சிசிடிவி காட்சியை நடை பயிற்சிக்காக தயாரான கடை உரிமையாளர் சித்திக் யூசப் தன் வீட்டில் இருந்தபடியே செல் போனில் பார்த்ததுடன் உடனடியாக கடைக்கு சென்றார்.

திருடன் கடையிலிருந்து வெளியேறி பஸ்சில் ஏறுவதை பார்த்த அவர் அவனை பின்தொடர்ந்து சென்று பீளமேடு காவல் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்டவன் கோவையை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments