நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி விபத்து... தமிழக மீனவர் ஒருவர் மாயம்

0 1589

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, தமிழக மீன்வர்கள் சென்ற மீன்பிடி படகு கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவர் மாயமாகினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன்,சேவியர் ஆகிய 3 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இலங்கை காரைநகர் அடுத்த கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது.

இதில், படகில் இருந்த மீனவர்கள் 3 பேரும் கடலில் மூழ்கினர். அதில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், ராஜ்கிரன் என்ற மீனவர் மாயமாகினார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட இருவரையும் காரை நகர் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments