சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக மினி பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை

0 6109

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக, முதற்கட்டமாக 12 மினி பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 210 மினி பேருந்துகள் இருக்கும் நிலையில், அதில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பயன்பாடு குறைந்து, இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 மினி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 மினி பேருந்துகள் இம்மாதத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments