காவல்நிலையத்தில் மதுபோதையில் அலப்பறை... காவலர்களை திட்டி, மிரட்டிய இளைஞர் கைது

0 2282

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையத்தில் மதுபோதையில் ரகளை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஆலங்குளம் காவல் நிலையம் உள்ளே நுழைந்துள்ளான். அவனை அங்கிருந்த போலீசார் உள்ளே விட மறுத்ததால் பணியில் இருந்த எஸ்.ஐ மற்றும் போலீசாரை தரக்குறைவாக கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளான். மேலும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் மீது மோதியது மட்டுமின்றி சாலையில் குறுக்கே சென்று போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளான்.


பின்னர் ஒரு வழியாக வீட்டில் கொண்டு போய் விட்ட போலீசார் நேற்று போதை தெளிந்த நிலையில் இருந்த அவனை காவல்நிலையம் அழைத்து வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments