வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

0 3253

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைத் தாக்குதல் அதிகரித்துள்ளது. நேற்று 20க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

66 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. நவராத்திரி பண்டிகையின் போது துர்க்கைப் பந்தல்கள் மீது தாக்குதல் நடத்திய மத அடிப்படைவாத வன்முறையாளர்கள் 4 பேரை குத்திக் கொன்றனர். வங்காள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்த போதும் வன்முறை  தொடர்ந்தது. இநநிலையில் டாக்காவிலிருந்து 225 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபுர் என்ற கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

29 வீடுகள் தீயிடப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூலில் புனித நூலை அவமதிப்பு செய்ததாக வதந்தி பரவியதால் இந்த வன்முறை நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments