கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடன் நகை, பணம் திருட்டு... கதறி அழுத பெண்

0 2557

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கூட்ட நெரிசலான நேரத்தில், பெண் ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும், ஒன்றரை சவரன் நகையையும் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா என்ற பெண், தனியார் வங்கியில் நகையை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு அண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். பூஜை முடிந்து கையிலிருந்த பையை திறந்து பார்த்த போது பணமும், மற்ற நகையும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments