இந்திய கடற்படையினரின் பாதுகாப்பு உறுதியானது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு

0 1256
கடல்வழிப் பாதுகாப்பை இந்தியக் கடற்படை உறுதிசெய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடல்வழிப் பாதுகாப்பை இந்தியக் கடற்படை உறுதிசெய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பை கடற்படையினர் உறுதி செய்திருப்பதாக கூறினார்.

கடல் பகுதிகளில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில் வர்த்தகத்திற்கு உகந்த துணையாக விளங்குவதாகவும் கடற்படையினரை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

அண்மையில் 41 புதிய கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட்டன. அதில் 39 உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமைப்படக் கூடிய விஷயம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments