நக்சலைட் பெண் போராளியான ஸ்வேதா தமது ஆயுதங்களை ஒப்படைத்து காவல்துறையிடம் சரண்

0 3201

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நக்சலைட் பெண் போராளியான ஸ்வேதா தமது ஆயுதங்களை ஒப்படைத்து காவல்துறையிடம் சரண் அடைந்தார்.

6 கொலைகள் உள்பட 46 வழக்குகள் அவர் மீது உள்ளன.அவரைப் பிடித்தால் 4 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. புரட்சிகரமான பாடல்கள் பேச்சுகளைக் கேட்டு தூண்டப்பட்டதால் தாம் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததாக செய்தியாளர்களிடம் கூறினார்.

உடல் நலபாதிப்பு, சுட்டுக் கொல்லப்படலாம் என்ற அச்சம் போன்ற காரணங்களால் தாம் சரண் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.தாம் இயக்கத்தில் இணைந்த போது இருந்த காலம் மாறிவிட்டது என்றும் தமது இலட்சியங்கள் ஏமாற்றத்தையே தந்தது என்றும் ஸ்வேதா கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments