இத்தாலியில் கொரோனா "ஹெல்த் பாஸ்" நடைமுறையை கண்டித்து டிரையஸ்ட் துறைமுக பணியாளர்கள் போராட்டம்!

0 1656

இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஹெல்த் பாஸ் நடைமுறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இத்தாலியில் கடந்த 15ம் தேதி முதல் அனைத்து அலுவலகங்களிலும் ஹெல்த் பாஸ் எனப்படும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து டிரையஸ்ட் துறைமுக பணியாளர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சிய போதும் அவர்கள் அசையாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments