படியில் பயணம், நொடியில் மரணம்.! - மாணவர்கள் உணர்வார்களா?

0 2151

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை, கோணசமுத்திரம், சிவாடா மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தில், இருபுறமும் உள்ள படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இதனை பின்னால் வாகனத்தில் சென்றவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

விபத்து ஏற்படாமல் தடுக்க மாணவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கூறும் அப்பகுதி மக்கள், மாணவர்களுக்காக கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை என்றும், எப்போதும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் இருத்த வேண்டும் என, போலீசாரும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments