கிருஷ்ணகிரியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.65 ஆயிரத்தை மாற்றி தரக்கோரி ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி கோரிக்கை!

0 4286

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகவுண்டனூர் கிராம பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற  ஒருவர் செல்லாத 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான சின்னகண்ணு, யாசகம் பெற்று சேர்த்த 65 ஆயிரம் ரூபாயினை செல்லும்படி மாற்றித்தருமாறு தெரிவித்திருந்தார். சில ஆண்டுகள் உடல்நலக் குறைவால் சேமித்த தொகையினை வைத்திருந்த இடத்தை மறந்து விட்டதாகவும், அரசு பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் நோட்டுக்களை மாற்றாமல் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments