வங்கதேசத்தில் தொடர்ந்து 5ஆவது நாளாக இந்து வழிபாட்டுத் தலம், வீடுகள் மீது பிரிவினைவாத குழுக்கள் தாக்குதல்

0 2610

வங்கதேசத்தில் தொடர்ந்து 5-ஆவது நாளாக இந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், பரபரப்பு நிலவுகிறது.

அந்நாட்டில் கடந்த வாரம் துர்கா பூஜையின் போது, குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. ராங்பூர், பிர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் இந்து வழிபாட்டுத் தலங்கள், வீடுகளை குறிவைத்து பிரிவினைவாத கும்பல், தாக்குதல் நடத்தியதோடு, 20 வீடுகளை தீ வைத்தும் கொளுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், வன்முறையில் இந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றால் வங்கதேசத்தில் இந்துக்கள் இயல்பாக வாழ்வது கடினம் என வங்கதேச இந்து கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்துக்களை பாதுகாக்க வங்கதேச அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இஸ்கான் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments