வியட்நாமில் கன மழையால் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

0 1941

வியட்நாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் ஹா டின் மற்றும் குவாங் பின் மாகாணங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மாயமான 3 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் படகுகள் மூலம் சென்றனர்.

குவாங் பின் மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments