சாலை நடுவே பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம், இரண்டு பேர் கைது

0 2112

மதுரை அலங்காநல்லூர் அருகே சாலை நடுவே பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடியதோடு, சினிமா பாடல் பின்னணியில் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்குச் சென்ற நிலையில், ஜெயசூர்யா, பிரவீன்குமார் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்து பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments