5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

0 4901

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று, காவல் ஆணையராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று, காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஸ் அதிகாரிகள் ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 2 பேருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments