காஷ்மீரில் வெளி மாநிலத்தவரை குறிவைக்கும் தீவிரவாதிகள்... வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

0 1564

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் காஷ்மீரில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் பீகாரை சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து இந்த மாதம் மட்டும் இது வரை 11 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாகி உள்ளனர்.

இது வரை கொல்லப்பட்ட 11 பேரில் 5 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால்  வெளிமாநிலத்தவரை காஷ்மீரில் இருந்து விரட்டும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 9 என்கவுன்டர்களில் இதுவரை 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட காடுகளில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுக்கும் முயற்சி 7 ஆவது நாளாக நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments