சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீவிபத்தில் சிக்கித் தொழிலாளர்கள் 2 பேர் பலி

0 1758

குஜராத் மாநிலம் சூரத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

125 பேரைத் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சூரத்தின் கடோதரா என்னுமிடத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் இன்று காலை திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது.

கீழ்த்தளத்தில் தீப்பிடித்ததும் மேல்தளத்துக்குச் சென்ற தொழிலாளர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்பினர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உயரமான ஏணியின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments