முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது; அதன் பாதுகாப்பு பற்றி பேச இனி ஏதும் இல்லை - மத்திய அரசு

0 2922

முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, அணை வலுவாக உள்ளதை குறிப்பிட்ட மத்திய அரசு, அதன் பாதுகாப்பு பற்றி பேச இனி எதும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், அணையின் கதவுகள், மதகுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதாகவும் மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டிற்கு இருமுறை 142 அடி தண்ணீரை தேக்கிவைக்க தமிழகத்திற்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு சமர்பித்த அறிக்கையின்படி, ஆணையம் ஒப்புதல் வழங்கியது கேரள அரசிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments