சூட்கேசில் சடலமாகக் கிடந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் வழக்கில் தொடர்புடையவர்கள் வங்கதேசம் தப்பினார்களா?

0 15505

சேலம் அஸ்தம்பட்டி அடுத்த குமாரசாமிபட்டியில் பூட்டிய வீட்டில் சூட்கேசில் பிணமாக கிடந்த பியூட்டி பார்லர் உரிமையாளரின் வழக்கில் தொடர்புடையவர்கள் வங்கதேசத்திற்கு தப்பியோடினார்களா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேஜ்மண்டல், சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெண் உள்பட இருவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தேஜ்மண்டல் பணிபுரிந்த பெங்களூரு பியூட்டி பார்லர்களிலும் தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கில் தொடர்புடையவர்கள் வங்கதேசத்திற்கு தப்பியோடியதாக தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments