லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்

0 1895

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விவசாய சங்கத்தினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்துகின்றனர்.

காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை போராட்டம் நடைபெறும். லக்கிம்புர் வன்முறை நிகழ்ந்த போது போராட்டத்தை அறிவித்திருந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள போதும் போராட்டத்தைத் தொடர விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் சங்கத்தலைவர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments